ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

வங்காளத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை!!

வடமாநிலங்களில் துர்கா பூஜா என்ற பெயரில் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். வெவ்வேறு விதமாக அம்பிகை ஒன்பது நாட்களும் பூஜிக்கப்படுகிறாள். குறிப்பாக வங்காளத்தில் இந்த துர்கா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.
சக்தியின் புராணக் கதை:
 
தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும், கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள் சக்தி.
 
இதனால் கோபமடைந்த சிவன், இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு கோரதாண்டவம் ஆடினார். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தார். அவ்வாறு சிதறிய  உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதிப் போற்றப்படுகிறது.
 
பின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும் தாய்  வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது.
 
வங்காளத்தில் மட்டுமே சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில், பதினாறு சக்தி பீடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வங்காளிகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே சக்தி வழிபாடு இருக்கிறது.