புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (12:29 IST)

நவராத்திரி விழா :தெலுங்கானா கவர்னர் தமிழிசை நடனம் : வைரல் வீடியோ

தெலுங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க விழாக்களில் ஒன்று பட்டுகாமா ஆகும். இந்த விழா நேற்று தெலுங்கானா மாநில கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் கொண்டாடப்பட்டது. இதில் அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பெண்களுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜக கட்சி தலைமை சமீபத்தில் அவரை தெலுங்கான மாநில கவர்னராக தமிழிசை தேர்ந்தெடுக்கப்பட்டு நீதிபதி முன்பு பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் நாடு முழுவதும் நவராத்திரி தின விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இவ்விழா கொண்டாடபடுகிறது. மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்பட்டும் இந்த விழா அம்மாநிலத்தில் வெகு பிரசித்தம்.

எனவே நேற்று தெலுங்கானா மாநில  ராஜ்பவனின் பட்டுகமா விழா கொண்டாடப்பட்டது. இதில் அம்மாநில கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு, அங்கிருந்த பெண்களுடன் நடனம் ஆடினார். அதன்பின்னர் இவ்விழா குறித்து அவர் மேடையில் பேசினார்.