வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By

நவராத்திரியின் மூன்றாம் நாள் பூஜை முறைகள்...!

முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் என்ன?, இந்த  மூன்று சக்திகளும் நவராத்திரியின் 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்?
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, வருகிற 18-ம் தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கிறது. நவராத்தியின்போது  பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். 
 
மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள்  சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.
 
நவராத்திரி மூன்றாம் நாள்:
 
வடிவம் : வாராகி (மக்கிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தணதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.