1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (09:38 IST)

சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?

Sukku
சித்தர்கள் காலம் தொட்டு மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் மூலிகைகளில் ஒன்றான சுக்கு பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.

சுக்குவுடன் வேறு சில பொருட்களை சேர்த்து சாப்பிடும்போது வெவ்வேறு விதமான பிணிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன மருத்துவ பலன்கள் கிடைக்கும் என்பதை காண்போம்.


சுக்குடன் மிளகு, திப்பிலி, சித்தரத்தை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர நாள்பட்ட கடுஞ்சளி பிரச்சினை தீரும்.

சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வர பித்தம் விலகும்.

ஒரு வெற்றிலையுடன் சிறிது சுக்கு சேர்த்து மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்கு, வேப்பம்பட்டை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

சுக்கு, கருப்பட்டி மற்றும் மிளகு சேர்த்து ‘சுக்கு நீர் காய்ச்சி’ குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

சுக்கு, வெந்தயம் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அலர்ஜி பிரச்சினைகள் தீரும்

சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை குடித்து வர மாந்தம் குணமாகும்.