பல நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு ஜூஸ் பயன்கள்..!
தனது இலை, காய், பழம், தண்டு என சகல பாகங்களில் இருந்தும் மனிதர்களுக்கு உணவாவதுடன், சத்துகளையும் அள்ளிக் கொடுப்பது வாழைமரம். அதன் வாழைத்தண்டை ஜூஸ் செய்து குடித்தால் சகல ஆரோக்கியத்தையும் வழங்கும்.
-
வாழைத்தண்டு ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் சேர்வது தடுக்கப்படுவதுடன், சிறுநீரக கல் இருந்தால் அதையும் கரைக்கிறது.
-
வாழைத்தண்டு ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எடை குறைக்க விரும்புவோர் காலையிலேயே ஒரு டம்ளர் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம்.
-
வாழைத்தண்டு ஜூஸில் இரும்பு மற்றும் விட்டமின் பி6 இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தசோகையை குணமாக்குகிறது.
-
இன்சுலினை மேம்படுத்துவதில் வாழைத்தண்டு ஜூஸ் சிறப்புமிக்கது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படும்.
-
வாழைத்தண்டுடன் சிறிது இஞ்சி சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும்.
-
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழைத்தண்டு ஜூஸ் ஏற்றது. மேலும் செரிமான தன்மையை அதிகப்படுத்துகிறது.
-
வாழைத்தண்டு ஜூஸில் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளதால் வாரத்துக்கு மூன்று முறை அருந்து வந்தால் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.