ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (08:36 IST)

எதையெல்லாம் சாப்பிடக் கூடாது? வள்ளலார் அருளிய சன்மார்க்க உணவு!

Vallalar 1
மனிதன் உண்ணும் உணவுகள் பொறுத்தே அவனது குணாதிசயங்கள் அமையும் என்பதை அறிந்த வள்ளலார் அமையும், ஆனந்தமும் பெற சத்துவ உணவுகளை அருளியுள்ளார்.

  • வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்ப வர்க்கங்கள் கூடாது. எப்போதாவது கூடும்.
  • சர்க்கரை பொங்கல், ததியோனம், புளிச்சாதம் முதலிய சித்திரா அன்னங்கள் கூடாது. எப்போதாவது ஒருமுறை கொள்ளலாம்.
  • பழவகைகளை தவிர்த்தல் வேண்டும். பேயன் ரஸ்தாளி கொள்ளலாம்.
  • சமைத்த உணவுகளை அப்போதே கொள்ளுதல் வேண்டும். பழைய உணவுகள் கொள்ளாதிருத்தல் வேண்டும்.
  • எந்த உணவிலும் உப்பு குறைவாகவே சேர்த்தல் நலம்.
  • புளியாரைக் கீரை தினந்தோறும் கிடைத்தால் நன்று. மற்ற கீரைகள் நேரும்போது கொள்ளலாம்.
  • துவரம் பருப்பு தவிர பிற பருப்பு வகைகள் எப்போதாவது ஒருமுறை கொள்ளலாம்.