வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (08:31 IST)

கரிசலாங்கண்ணி கீரையின் கணக்கற்ற அற்புத நன்மைகள்!

கீரைகளிலேயே பல சத்துகளை வழங்கக்கூடியதும், மருத்துவ மூலிகையுமாக பயன்படும் கரிசலாங்கண்ணியையை ‘வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை’ என்றும் அழைப்பர்.

மருத்துவ குணம் கொண்ட மூலிகையான கரிசலாங்கண்ணி கீரை, வெண்கரிசாலை, கையாந்தகரை என்ற பெயர்களில் கூறப்படுகிறது.
 
  • கரிசலாங்கண்ணி இலையை அரைத்து புண்கள், காயங்களில் தடவி வர விரைவில் ஆறும்.
  • கரிசலாங்கண்ணி, தும்பை, கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து கஷாயமாக குடித்து வந்தால் தொப்பை குறையும்.
  • புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் சக்தி கரிசாலங்கண்ணிக்கு உண்டு.
  • கரிசலாங்கண்ணி இலையை சாறாக்கி குடித்து வந்தால் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
  • கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் மறைந்து மினுமினுப்பு கூடும்.
  • கரிசலாங்கண்ணி பொடியுடன், திப்பிலி சூரணம் சேர்ந்து ஒரு மண்டல சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், ஈளை பாதிப்பு குறையும்.