எண்ணற்ற நன்மைகளை கொண்ட மஞ்சள் கரிசாலை !!
வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையாக பயன்படுத்தவதற்கு ஏற்றதல்ல. மூலிகையாக மட்டுமே பயன்படுத்துவதற்கு ஏற்றது ஆனால் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணியை மூலிகையாகவும், கீரையாகவும் உணவில் பயன்படுத்த முடியும்.
மஞ்சள் கரிசாலை மருத்துவ குணம் கொண்டவை. இந்த கீரை கல்லீரல், கண் பார்வை, முடி வளர்ச்சி, பல் வியாதி, தோல் பளபளப்பு, அல்சைமர் என்று சொல்லக்கூடிய மறதி குணப்படுத்துதல், ரத்த சோகை. வயிற்றுப்புண் இத்தனை நோய்க்கும் அருமருந்து. இவ்ளளவு சிறப்புகள் வாய்ந்த இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையை அனைவரும் வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டு வந்தால் லிவருக்கு நல்லது.
மஞ்சள் கரிசலாங்கண்ணி இரத்தத்தை சுத்தாமாக்குவதிலும் உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றி உடலுக்கு வலிமையை தருவதிலும் சிறப்பானது என சொல்லப்படுகிறது. இரத்தத்தி உற்பத்தி செய்து இரத்த சோகையையும் நீக்குகிறது. ஊளைச்சதைகளையும் குறைக்கிறது.
இந்த இலைகளில் இருந்து பெறப்படும் சாறுகளில் வைட்டமி A அதிக அளவில் உள்ளதால் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. மேலும் கண்களுக்கு குளிர்ச்சியூட்டி கண் நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. பார்வை நரம்புகளையும் பலப்படுத்துகிறது.
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை மென்று சாறினை உட்கொள்வதோடு அதனுடைய இலைகளால் பல் துலக்கிவர வாய்ப்புண் குணம்பெறுவதோடு வாய் நாற்றமும் நீங்கும். பற்களும் உறுதியாகி பளிச்சிடும்.