புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட மாதுளம் பூ!!

மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை கொண்டுள்ளதுடன் இது இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மிகச் சிறந்த மருந்து பொருள்.
மாதுளம் பழத்தை விட மாதுளம் பூவிற்கு அதிக ஆற்றல் உண்டு. மாதுளம் பூவிற்கு வாய்ப்புண்கள், குடல் புண்களாஇ ஆற்றுகிற தனமை  உண்டு.
 
இரும்பு, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. ரத்த மூலத்தை குணப்படுத்துவதில் மாதுளம் பூக்கள் பெரிய பங்கு வகிக்கின்றன, ரத்த சோகை  உள்ளவர்கள் வாரத்தில் ஒரு நாள் மாதுளம் பூவைச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தி அடையும்.
உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் மாதுளம் பூவிற்கு இருப்பதால் உஷ்ண உடல் வாகு உள்ளவர்கள் சாப்பிடலாம்.
 
வெள்ளைப்படுதல் கட்டுப்படுத்தும் ஆற்றலும் மாதுளம் பூவிற்கு உள்ளதாம், வயதுக்கு வந்த பெண்களுக்கு தர, ஆரோக்கியம் மேம்பட்டு உடல் பலப்படும். மாதுளம் பூவைத் துவையல் செய்து சாப்பிட்டால் பல நன்மைகளை அடையலாம்.
 
உலர்ந்த மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டால் கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டி அளவு சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்தினால் உடனே குணம் அடையும். 
 
உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே  முறையில் கொடுக்க குணம் தெரியும்.