1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட வேப்பிலை

வேப்பிலை கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதிபடுபவர்கள் இந்த வேப்பிலை மற்று மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.
வேம்பின் இலை, காய், கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. வேப்பிலை கோழையை அகற்றும். சிறுநீர் பெருக்குதல், வீக்கம்,  கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவும்  பயன்படுகிறது.
 
தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியா போன்ற காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவுமின்றி குணமாகும்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும். வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்து, ரசம் வைத்து சாப்பிட்டு வர பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும். வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்படையும்.
 
வேப்பிலை, எலுமிச்சம் பழச்சாற்றை அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும். வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்று போட குணமாகும்.
வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் தலைக்கு குளித்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் போய்விடும். வேப்பிலை கண்களின் பார்வை  திறனை அதிகரித்து, கண்களில் ஏற்படும் எரிச்சல், சிவந்த கண்கள், தூக்கமின்மை போன்ற கண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.