1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (10:24 IST)

எந்த வாழைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது...?

வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் கொண்டவை.


வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகவாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.
 
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். 
 
மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம். நாம் வாழைக்காயை சமைக்கும்போது அதை, முழுவதுமாக உரித்து விடுகிறோம். அப்படி செய்யாமல் வாழைக்காயின் மேல் தோலை மட்டும் அழுத்தி சீவாமல், மேலாக மெல்லியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. 
 
வாழைக்காயை சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்யலாம். வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், கழிச்சல், இருமல் போன்றவையும் நீங்கும்.
 
பச்சை வாழைக்காயை சின்னசின்ன ஸ்லைஸ்களாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.களையும் சாப்பிடலாம்.
 
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம்.