1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 14 டிசம்பர் 2021 (19:09 IST)

ரெட் ஒயின் குடிப்பதால் தோல்களுக்கு பொலிவை தருமா...?

உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்றில் இந்த ரெட் ஒயினும் ஒன்றாகும். இதை அளவாக குடிக்கும்போது அது உடலுக்கு நல்ல பயனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

பெண்கள் இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து அவர்களின் தோல்களுக்கு நல்ல பொலிவை தருகிறது.
மேலும் இதயநோய், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக வலுவுட்டத்தை கொடுத்து அவர்களை பாதுகாக்கிறது.
 
ரெட் ஒயினில் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்கள் காணப்படுவதால் இவை புற்றுநோயை தடுக்கும் வல்லமை உடையதாக காணப்படுகிறது.
 
திராட்சையின் தோலில் தன அதிக அளவு ஆன்டிஆக்சிடன்கள் காணப்பட்டு அதை நொதிக்கவைத்து தயாரிக்கப்படுவதால் அதிக சத்து நிறைந்து காணப்படுகிறது.
 
ரெட் ஒயினில் குறைந்த அளவே கலோரிகள் காணப்படுவதால் இது உடல் எடையை அதிகரிக்காது. எனவே உடல் எடை குறைக்க விரும்புவோர் இதனை அருந்துவது நல்ல பயனை கொடுக்கும்.
 
ரெட் ஒயினை குடிப்பதனால் அது மன அழுத்தத்தை சரிசெய்து பாதிக்கப்பட்ட டி.என்.எ-வை சரிசெய்யும் ரெஸ்வெரட்ரால் உள்ளது.