1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூன் 2023 (10:43 IST)

ஆண்கள் பலாப்பழம் சாப்பிடுவது நல்லதா?

Jackfruit
கோடைக்காலத்தில் பிரபலமான உணவுகளில் பலாப்பழமும் ஒன்று. பல்வேறு நன்மைகளை கொண்ட பலாப்பழம் ஆண்களுக்கும் பல நன்மைகளை அள்ளித்தருகிறது. அதுகுறித்து அறிவோம்.


  • பலாப்பழம் சாப்பிடுவது உடலுக்கு இன்சுலின் வழங்குவதற்கு சமம். இது உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
  • பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துகிறது. வாத நோய் பிரச்சனையை குறைக்கிறது.
  • தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க பலாப்பழம் உதவுகிறது. முடி உதிர்தல் பிரச்சினைகளை போக்க உதவுகிறது.
  • இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் பலாப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
  • பலாப்பழத்தில் உள்ள கால்சியம் உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது.
  • பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, வளர்சிதை மாற்றத்தை சீராக இயங்கச் செய்து, வாயு மற்றும் வயிற்றில் புண்களைத் தடுக்கிறது.
  • பலாப்பழத்தில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள், ஐசோஃப்ளேவின்கள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
  • பலாப்பழத்தை உண்பதால் ஆண்களின் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.