செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்க உதவும் வழிமுறைகள் !!

சிறுநீர் வெளியேறாமல் விட்டால் உடலில் நீர் மற்றும் உப்பு என்று வழக்கமாக சொல்லப்படும் கிரியாட்டினின் அளவு அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். 
 

இரண்டு, மூன்று நாட்களுக்கு மலம் வெளியேறாவிட்டால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் பெரும் அவஸ்தை ஏற்பட்டுவிடும். செரிமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை, உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதில் ஏற்படும் பிரச்னையே மலச்சிக்கலுக்கு காரணம். போதுமான அளவில் தண்ணீர் அருந்தாதது, நார்ச்சத்து உணவை உட்கொள்ளாதது, உடற்பயிற்சியின்மை என மேலும் பல காரணங்கள் இதற்கு உள்ளன.
 
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். வாழைப்பழத்தின் நார்ச்சத்து வயிறு மற்றும் குடலின் செயல்திறனை மேம்படுத்தி உணவு கழிவுகளை வெளியேற்றும் செயல்பாட்டை எளிமையாக்குகிறது.
 
ஒரு நாளைக்கு 6-8 கிளாஸ் தண்ணீர் அருந்தி வந்தால் மலச்சிக்கல் பிரச்னை வராது. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் அருந்திவிட்டு சில எளிய உடற்பயிற்சிகள் செய்தாலே போதும் மலம் கழிக்க வேண்டிய உணர்வு வந்துவிடும்.
 
மலச்சிக்கல் பிரச்னையால் அவதியுறுபவர்கள் பேதி மாத்திரை வாங்கி போட்டுக்கொள்வது உண்டு. இது தவறானது. பேதி மாத்திரை போடுவதற்கு பதில் இயற்கையான முறையில் சில வழிகளை பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னையே வராது.
 
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அன்னாசிப்பழ ஜூஸ் அருந்தலாம். இதில் செரிமான அமிலங்கள், நொதிகளைத் தூண்டும் நுண் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் உணவு செரிமானம் ஆன பிறகு சிரமமின்றி மலக்குடலுக்கு கொண்டு சேர்த்து வெளியேற்றும் தன்மை கொண்டதாக உள்ளது.
 
எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும். எலுமிச்சை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பேரிக்காய் சாப்பிடுவதும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கும்.