செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...?

தினமும் ஒரு கிளாஸ் பாலுடன், ஒரு ஸ்பூன் நெய் கலந்து அருந்தி வருவது உடலின் செரிமான அமைப்பை மிகவும் பலப்படுத்தும்.

நெய் கலந்த பாலை நாம் தினமும் அருந்தும் போது அவை இரண்டும் நமது உடலின் வளர்சிதை மாற்ற அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.
 
தினமும் இரவில் நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் அந்த வலிகளிலிருந்து விடுபடலாம். நெய்யானது செயல்பட்டு மூட்டு வலியினை குறைக்க உதவுகின்றது. 
 
தினமும் இரவில் நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இந்த இரண்டு பொருட்களும் நம்மை வெகுவிரைவாக தூங்கவைக்கும்.
 
உடல் மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்கள், இந்த நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் விரைவில் உடல் எடையினைக் கூட்டி நலமுடன் வாழலாம். 
 
பாலூட்டும் தாய்மார்கள் இந்த நெய் கலந்த பாலினை தினமும் அருந்தி வர நல்ல பயனைக் கொடுக்கும்.
 
எடையைக் குறைக்க நெய் உதவியாக இருக்கிறது. நெய் என்பது கொழுப்பு சத்தின் ஆரோக்கியமான மூலமாக இருக்கிறது. எனவே நாம் எடையிழக்க வேண்டுமென்று அதை உணவில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை.