திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சிறுகண்பீளை செடியின் மருத்துவ நன்மைகள் என்ன...?

சிறுகண்பீளை இலையை இடித்து சாறுபிழிந்து 30 மில்லி அளவு குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு கல்லடைப்பு, பெரும்பாடு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

சிறுகண்பீளை வேர் பட்டையில் பனை வெல்லம் சேர்த்து விழுது போல் அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தாலும் மேற்கண்ட நோய் குணமாகும்.
 
சிறுகண்பீளையுடன் சிறு நெருஞ்சில், மாவிலங்கை வேர், பேராமுட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து குடிநீர் செய்து குடித்து வர சிறுநீரகத்தில் உள்ள கல்லைக் கரைத்து வெளியேற்றும்.
 
சிறுகண்பீளை செடியை சமூலமாக (செடியின் அனைத்து பாகமும்) எடுத்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி குடித்துவர சிறுநீரகம் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.
 
சிறுகண்பீளை இலை 44 கிராம் எடுத்து வெண்ணெய் போல நன்கு அரைத்து நீர் கலக்காத எருமை: மோரில் கலந்து குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு, நீர்த்தாரை  எரிச்சல் ஆகியவை குணமாகும்.
 
சிறுகண்பீளை, நெருஞ்சில் வேர், சீதேவி செங்கழுநீர், மாவிலங்கப்பட்டை இவற்றை சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீர்விட்டு நன்கு காய்ச்சி எட்டில் ஒரு பங்காய் வற்றியதும் வடிகட்டிக் கொள்ளவும். இதை காலை, மாலை இருவேளை குடித்து வர கல்லடைப்பு குணமாகும்.
 
சிறுகண்பீளை, சிறுகீரை வேர், நெருஞ்சில் இவற்றை சம அளவு எடுத்து இடித்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி உட்கொண்டு வந்தால் கல்லடைப்பு பிரச்சினை தீரும்.