1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆண்மை கோளாறுகளை முற்றிலும் நீக்கும் நத்தை சூரி மூலிகை !!

நத்தை சூரி விதையை லேசாக வறுத்து பொடியாக்கி தேனில் கலந்து குழைத்து தினமும் உண்டுவர உடலில் உள்ள வியாதிகள் நீங்கும். உலகத்தில் மூலிகை  எல்லாவற்றிற்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. 

நத்தை சூரி மூலிகை ஒரு மகா மூலிகை ஆகும். நத்தைசூரி மூலிகை ஒரு வசிய மூலிகை ஆகும். நத்தை சூரி மூலிகைக்கு சாபம் என்பது கிடையாது.
 
நத்தை சூரி மூலிகை உண்டு வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் ஏற்படாது. உடல் அழியாமலும் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம். மேலும் விந்து கெட்டிப்படும். நத்தைசூரி மூலிகை ஒரு காயகற்ப மூலிகை ஆகும்.
 
நத்தை சூரி விதைப்பொடி மர்றும் அனுக்கரா கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டும்.
 
நத்தை சூரி செடியின் இலையை பொடியாக்கி, பால் சேர்த்து உண்டு வந்தால் உடல் பலம் பெறும்.
 
தினமும் காலை நத்தை சூரி விதைப்பொடி மற்றும் பனைவெல்லம் சேர்த்து தேனீராக அருந்தி வந்தால், கல்லடைப்பு ஏற்படாது. உடல் இறுகும்.
 
நத்தை சூரி விதை, பசும்பால் மற்றும் தண்ணீர்விட்டான் கிழங்கு சாறு இவற்றை கொதிக்க வைத்து பின்பு நத்தை சூரி விதையை பொடியாக்கி தினமும் உண்டு வந்தால் நெடுங்காலம் வாழலாம்.
 
நத்தை சூரி விதையை பொடியாக்கி பால் கலந்து காலை, மாலை உண்டு வர உடல் வலிமை பெறும். விந்து கட்டும் ஆண்மை கோளாறு விலகும்.