1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Some types of herbal powders and its benefits !!

சில வகை மூலிகை பொடிகளும் அதன் பயன்களும் !!

மூலிகை பொடிகள்
முருஙகைவிதை பொடி - இது சமீப காலமாக அதிக அளவில் பேசப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கொடுக்க கூடியது. அது மட்டுமல்லாது ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
 
வாதநாராயணன் பொடி - வாத நோய்களுக்கான நிவாரணி. அனைத்து விதமான பக்கவாதம், கை, கால் மூட்டு வலிக்கு ஏற்றது.
 
பாகற்காய்  பொடி - உடலில் உள்ள கிருமிகள், புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள இன்சுலின் அளவை சமன் படுத்த கூடியது.
 
வாழைத்தண்டு பொடி - எல்லா விதமான சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல் அனைத்திற்கும் மிகச் சிறந்தது.
 
சித்தரத்தை பொடி - நாள் பட்ட சளி, இருமல் போன்றவற்றை நிக்க கூடியது. சற்று காட்டமாக இருப்பதால் தேனுடன் கலந்து சாப்பிடலாம். வாயு கோளாறுகளுக்கு  நல்லது.
 
பொடுதலை பொடி -  பெயரை பார்த்தவுடன் புரிந்திருக்கும், ஆம் இது பொடுகு தொல்லை, பேன் தொல்லை,  முடி உதிரிவதை தடுக்கும்.
 
சுக்கு பொடி - சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை எனபர்கள். நம் உடலில் உண்டாகும் அஜீரணம், போன்ற பிரச்சனைகளை தீர்த்து செரிமானம் ஒழுங்காக நடைபெறும்.
 
ஆடாதொடை பொடி - சுவாச கோளாறு, ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஆடாதொடை பொடியினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல மாற்றம் தெரியும்.
 
கருஞ்சீரகப்பொடி - நீரழிவு நோய், குடல் புண் போன்றவை நீங்கும்.
 
வெட்டி வேர் பொடி - தினமும் நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு படிப்படியாக குறைந்து குளிர்ச்சி தரும். இந்த நீரில் குளித்து வந்தால் வேர்க்குரு, வேர்வை வாடை  வரத்து. நல்ல முழுவதும் புத்துணர்ச்சி தரும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வேம்பின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்....!!