திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொலஸ்ட்ரால் உண்டாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?

நகர்மயமாக்கலில் வாழ்ந்து வருபவருகளுக்கு ஆங்காங்கே கடைகளில் கிடைக்கும் உணவுகளை வங்கி உண்பது தான் வழக்கம் ஆனால் அதற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாத காரணங்களினால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிவிடுகிறது.

நம் உடலில் கல்லீரல் உடலுக்குத் தேவையான கொழுப்பில் குறிப்பிட்ட அளவை மட்டுமே சுரக்கிறது. அன்றாடம் நாம் உண்ணும் உணவின் மூலமும் நம் உடலில் கொழுப்பு சேர்கிறது. அதிலும் நாம் கொழுப்புச் சத்து மிகுதியாக உள்ள உணவு வகைகளையும் துரித உணவுகளையும் உண்பதால் நம் உடலில் கொலஸ்ட்ராலின்  (இரத்தத்தில் கொழுப்பின்) அளவு அதிகரிக்கிறது.
 
சிறுவயதிலிருந்தே கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்டவர்களுக்கு ஐம்பது அறுபதில் வரவேண்டிய இருதய நோய்கள் முப்பது வயதிலே வந்து விடுகிறது.  இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பை உருவாக்கி இளவயதிலேயே இறப்பிற்கு வழிவகுக்கின்றன.
 
அன்றாடம் உடற்பயிற்சி இல்லாமல் செயலற்று இருப்பதும் அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாமலும், உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க காரணமாகிறது.
 
உடல் பருமனாகவும், உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருப்பதால் கலோரிகள் எரிக்கப்படாததால் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்கும். பொதுவாக இவ்வாறு இருப்பது நல்ல கொழுப்பின் (மிகையடர்த்தி லிப்போ புரதத்தின்) அளவைக் குறைக்கிறது.
 
நாம் உண்ணும் உணவில் நல்ல கொழுப்புகளும் உள்ளன. அவைகளை நமது உணவில் சேர்த்து உண்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் அண்டாமல் நமது உடல் மிக நலமுடன் இருப்பதுடன் நமது இருதயமும் நலமாக இருக்கும்
 
புகைப் பிடித்தலும் இரத்தக் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவை அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகும். இவ்வாறு கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவது இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.