திங்கள், 29 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தரும் கொத்தமல்லி....!!

கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும்  பாதிப்புகளை குணமாக்கும். 

கொத்தமல்லி தழைகள், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கொழுப்பை  அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
 
கொத்தமல்லி இலைகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பு மேம்படும். இது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. கொத்தமல்லி இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
 
கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
 
கொத்தமல்லி இலைகளில் உள்ள வைட்டமின் அல்சைமர் நோய்க்கு நன்மை பயக்கும். கொத்தமல்லி இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது கீல்வாதத்திலும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
 
கொத்தமல்லி இலைகள் வாயின் காயங்களை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி இலைகள் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க  உதவுகின்றன.
 
கொத்தமல்லி இலைகள் பருக்கள், பிளாக்ஹெட்ஸ் மற்றும் வறண்ட சருமத்தின் பிரச்சினையில் பயனளிக்கும். கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி வெறும் வயிற்றில் குடிப்பது சிறுநீர் வழியாக கல்லை அகற்ற உதவும்.