திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் என்ன...?

அத்திப்பழத்தில் அதிக நார் சத்தும் நிறைந்துள்ளது. நார் சத்து உள்ளதால் மலசிக்கல் ஏற்படாமலும் காக்கும். அத்திப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
அத்திப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இது உங்கள் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள  உதவுகின்றது.மேலும் சோடியம் ஏற்படுத்தும் தீய விளைவுகளை இது எதிர்த்து நல்ல பலன்களை தருகின்றது.
 
அத்திபழத்தில் நிறைந்திருக்கும் பெக்டின் உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்தை பெரிதும் குறைக்க உதவுகின்றது.  இதில் அதிக வைட்டமின் A  இருப்பதால் உங்கள் கண்ணின் ஆரோக்கியத்தை இது சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளையும்  ஏற்படாமல் தடுகின்றது.
 
அத்திப்பழத்தை எலுமிச்சை பழ சாரோடு சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால், நல்ல பொலிவும், புத்துணர்ச்சியும் உங்கள் முகத்திற்கு  கிடைக்கும்.
 
அத்திப்பழத்தை தேனோடு சேர்த்து நன்கு மசித்து உங்கள் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள்  மறைவதை நீங்கள் காணலாம். இது உங்கள் முகப்பருக்களை போக்க ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
 
அத்திப்ழத்தின் தோல் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த அணுக்களை அகற்றி நல்ல மிருதுவான சருமத்தை கொடுக்கும்.
 
அத்திப்பழ பேஸ்பேக் உங்களுக்கு நிச்சயம் நல்ல பலனைத் தரும். இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் C மற்றும் பிற சத்துக்கள் உங்கள்  முகத்திற்கு தேவையான சத்துக்கள் மற்றும் போஷாக்கைத் தரும்.