ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (16:08 IST)

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறதா முருங்கைக்காய் !!

முருங்கைக்காயில் அளவற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. முட்டைக்கு நிகரான புரதச்சத்தும் இதில் உள்ளது. கால்சியம், விட்டமின் C-யும் இதில் நிறைவாக உள்ளன.
 

முருங்கை மரத்தின் இலை, காய் , பூ , பிசின் என அனைத்தும் உடலுக்கு ஊட்டச்சத்து தருகின்றன. அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முருங்கைக்காய் தேநீர் மிகவும் உதவியாக இருக்கும். சரி வாங்க முருங்கை டீ எப்படி போடுவது குறித்து பார்க்கலாம்..
 
முருங்கைக்காய்களை துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். முருங்கைக்காய் சுருங்கி அதன் சாறு நன்கு இறங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி கொள்ளுங்கள். பின் அந்த நீரை பருகுங்கள்.
 
இதில் விட்டமின் A சத்து நிறைவாக உள்ளதால் கண் பார்வைக்கு நல்லது. முருங்கைக்காயில் இரும்புச் சத்து, உயிர்ச்சத்து, கனிமங்கள் இருப்பது உடலுக்கு நோய் சக்தி ஆற்றலை அதிகரிக்கிறது. 
 
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
 
வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
 
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் முருங்கைக்காய் உதவுகிறது. இது நச்சு நீக்கியாகவும் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது.