செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (09:58 IST)

தினந்தோறும் பாகற்காய் ஜூஸ் பருகுவதால் என்ன நன்மைகள்...?

Bitter Gourd
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.


ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் தினந்தோறும் பருகி வந்தால் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கபடுகிறது. இது செரிமான பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கள் இருந்து விடுவிக்கும்.

நீரழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயை ஜுஸ் போட்டு அருந்தலாம். மேலும் பாகற்காய் பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.

பாகற்காயை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறை மிக்ஸ் செய்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் பருகி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை எளிதில் நீங்குகிறது.

பாகற்காய் ஜூஸ் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவந்தால் கல்லீரல் பிரச்னைகள் பறந்து போகும்.