வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (15:28 IST)

எந்த பழங்களில் என்ன வைட்டமின்கள் உள்ளது தெரியுமா...?

Fruits
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும். மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது.


ஆரஞ்சு ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும். ஆரஞ்சு சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.

தர்பூசணி மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம்.

ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். பப்பாளிப்பழம் சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது. முக்கனிகளில் முதன்மையானது.

பழங்களின் அரசன். மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும்.