வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (14:45 IST)

காராமணியில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பலன்களும் !!

Karamani
காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.


காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.

காராமணியானது குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் அதிக பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காராமணியை தொடர்ந்து எடுத்து கொள்ளவேண்டும்.

உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் இரத்த சோகை நோய் ஏற்படும். காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் சருமம் முதிர்ச்சி அடைவதை தடை செய்து வயதான தோற்றம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது.

காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது இன்சுலின் சுரப்பினை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.