திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (13:42 IST)

வெங்காயத்தை எந்த முறையில் உட்கொண்டால் என்ன பலன்கள்...?

வெங்காயத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. வெங்காயத்தை நெருப்பில் சுட்டு அதனுடன் சிறிது மஞ்சள், நெய் சேர்த்து பிசைந்து, மீண்டும் லேசாக சூடுபடுத்தி கட்டிகள் மேல் வைத்து கட்டினால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.


பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடலாம் அல்லது வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

மூட்டு வலியால் அவதிபடுபவர்கள் வெங்காய சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுவலி ஏற்படும் நேரத்தில் தடவிவர வலி குணமாகும். உடல் பலம் அதிகரிக்க வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும். சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.

புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றினை ஒரு நாளைக்கு ஒரு மூடி வீதம், மூன்று வேளைகள் குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். வெங்காயத்தில் இன்சுலின் சத்து உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

சாதத்துடன் சிறிது உப்பு, இரண்டு வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து, வெற்றிலையில் வைத்து நகச்சுத்தி உள்ள விரலில் கட்டி வந்தால் நகச்சுத்தி சரியாகிவிடும்.