அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!
அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்துள்ளதால் அத்திபழதை வாரத்தில் 2 நாட்களாவது எடுத்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்க பயன்படுகிறது. அரை காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும். புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் அதிக அளவு உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து உடலை புற்று நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.
அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மலச்சிக்கல் பாதிப்பை சரிசெய்யலாம்.
அத்திப்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் வாய்நாற்றம் நீங்கி வாய்க்கு புத்துணர்ச்சி கிடைக்கும். வாய்ப்புண், ஈறுகளில் வீக்கம் போன்ற நோய்களைக் குணமாக்க அத்திபழ இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் சரியாகிவிடும்.
நீர் கடுப்பு, பித்தப்பை கல், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அத்திபழத்தை அடிக்கடி சாப்பிடுவதின் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.