1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (10:06 IST)

தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மைகள் !!

Sathukudi juice
மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் எளிதில் செரிமானம் அடைந்து உடல் புத்துணர்வு பெரும். சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது. சாத்துக்குடி ஜீரண சக்தியை அதிகரித்து, பசி உணர்வை தூண்டுகிறது.


சாத்துக்குடி ஜுஸானது இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சு பொருள், மற்றும் உடலில் வளர்ச்சிதைவு மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகளையும் நீக்கும் தன்மை இந்த சாத்துக்குடி ஜுஸிற்கு உள்ளது. சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதால் கண்டிப்பாக உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் சுத்தமாகும்.

மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது. சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிடுவதால் முகம் பொலிவடைந்து முகம் பளிச்சிடும்.

சாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக பையில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று நோய் உருவாகாமல் தடுக்கும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது.

அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்ற இரைப்பைக் கோளாறுகளை குணப்படுத்த சாத்துக்குடி உதவுகிறது. சாத்துக்குடி குறிப்பிட்ட அஜீரண கோளாறுகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேலும் சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும்.

தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், இதில் உள்ள வைட்டமின் சி உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.