1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Watermelon is rich in vitamin C !!

வைட்டமின் சி சத்துக்களை அதிக அளவில் கொண்டுள்ள தர்பூசணி !!

வைட்டமின் சி
இரத்த நாளங்களில் உள்ள அழுக்குகளை நீக்கவும் இந்த தர்பூசணி உதவுகிறது. பிபி உள்ளவர்கள் தாராளமாக இந்த தர்பூசணியை சாப்பிட்டு வரலாம் பிபி படிப்படியாக குறையும்.


மற்ற பழக்களில் இல்லாத பைட்டோ நியூட்ரியன் சத்துக்கள் இந்த பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.

தர்பூசணியை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண் உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் வல்லமை கொண்டது.

தர்பூசணியில் லைக்கோபீன் எனும் புரத சத்துக்கள் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடவும் தர்பூசணி நமக்கு உதவுகிறது.

தர்பூசணியில் அதிக அளவு நீர் தான் இருக்கிறது கலோரியானது குறைவாக தான் இருக்கிறது எனவே இது எடையை குறைக்க உதவுகிறது. தர்பூசணி தலைமுடி மற்றும் சருமத்தை அழகாக்கும்.

ஒருசிலருக்கு வைட்டமின் சி குறைபாட்டால் ஆஸ்துமா வருகிறது எனவே தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் காணப்படும் சுண்டைக்காய் !!