செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (17:45 IST)

உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை பெற்றுத்தரும் நல்லெண்ணெய் !!

Sesame Oil
நல்லெண்ணெய்யை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடல் இயக்கம் சீராக நடைபெற்று செரிமானம் சீராக நடைபெறும். இதனால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.


நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

நல்லெண்ணெய்யில் கால்சியல் மற்றும் துத்தநாகம் வளமாக இருப்பதால் எலும்பு நோய் வராமல் தடுக்கும்.

முக்கியமாக, நல்லெண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் உண்டாவது தடுக்கப்படும். உடல் சூடு குறையும்.

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும். தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

கண்களின் ஆரோக்கியம் மேம்படும். நல்லெண்ணெய்யில் மனித உடலால் தயாரிக்க முடியாத லினோலெனிக் அமிலம் மிக அதிக அளவில் இருக்கிறது. இயற்கையிலேயே வைட்டமின் E இருக்கிறது. நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.