செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (17:49 IST)

ஆரோக்கியமான மூளை செயல்பாட்டினை ஊக்குவிக்கும் அக்ரூட் !!

Walnuts
அக்ரூட் பருப்பில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, எனவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க விருப்பினால் தினமும் அக்ரூட் பருப்பை சாப்பிடலாம்.


வைட்டமின் E என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தின் காரணமாக அக்ரூட் பருப்புகள் சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.

வறண்ட சருமத்திலிருந்து பாதுகாப்பதற்காக நீங்கள் அக்ரூட் பருப்பு எண்ணெயை பயன்படுத்தலாம்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நினைப்பவர்கள் தினமும் அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம்.

அக்ரூட் பருப்பில் உள்ள அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை ஒருவர் தினமும் சாப்பிட்டால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.

அக்ரூட் பருப்புகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன, அவை புற்றுநோய், இதய நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகின்றன.