1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:50 IST)

பல்வேறு சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் திப்பிலி !!

திப்பிலியானது பசியை தூண்டும் தன்மை கொண்டது. இருமல், ஜுரம், தோல் நோய்கள், மூட்டு வலி, மூல தொந்தரவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கங்களை நீக்க உதவுகின்றது.


திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை நீங்கும்.

திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும்.

திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப்போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

திப்பிலி மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டை புண் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும், பல்வேறு சுவாச பிரச்சினைகளை சரிசெய்யவும் உதவுகிறது.