1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:26 IST)

உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பீட்ரூட் ஜூஸ் !!

Beetroot
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து குழாய்களில் இரத்த ஓட்டத்தை சீராக்கும், இதன் மூலமாக ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.


தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இதில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு உண்டாவதற்கான காரணிகளையும் அழிக்கும்.

பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் குறைவு ஆனால் நார்ச்சத்து அதிகம் மற்றும் கொழுப்புகள் கிடையாது. அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது .

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து உடலில் செரிமான உறுப்புக்களை சீராக இயக்கி உணவு செரிமானம் சீராக நடைபெற உதவி செய்யும் .இதன் மூலமாக வயிற்று வலி, வயிறு உப்புசம் ,அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்.

உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்காமல் போகும் போதுதான் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் வரும். இது நம் உடல் செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராக கிடைக்க உதவி செய்யும். இதன் மூலமாக, உடல் சுறுசுறுப்பாக இருப்பதோடு புத்துணர்ச்சியாக இருக்கும்.