கற்றாழை ஜூஸை தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா...?
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கற்றாழையின் மடலில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். அலர்ஜி, கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வலி குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
கற்றாழை சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.