புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:15 IST)

பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருந்தாக விளங்கும் வில்வம் !!

Vilvam
வில்வம் பழத்தின் தோல் பகுதி வழவழப்பாகவும், கெட்டியாகவும் இருக்கும். எனினும் இனிப்புச் சுவையுடையதாகும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. வயிற்று வலியைக் குணப்படுத்தும்.


வயிறுவலியை போக்க வில்வத் தளிரை வதக்கிச் சூடாக்கி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்பட்டு வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளையும் சரி செய்ய உதவும். வில்வ இலை, வில்வம் பழம் இரண்டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்தாகும்.

வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும். வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும். சிறுநீரக கற்களைக் கரைக்கும். இதை ஊறுகாய் போல போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வில்வம் மிக சிறந்த மருந்தாகச் செயல்படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து தலைக்குத் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி உதிர்தல் நீங்கும்.

வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொண்டு அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்பார்வை தெளிவுபெற உதவும். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும்.