1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (08:58 IST)

சகல பாவங்களையும் நீங்க செய்யும் வில்வம் !!

வில்வ மரத்தின் இலைகள், கொட்டைகள், பட்டை, பூக்கள் , பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை.


மூன்று பகுதிகளை கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கருதபடுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது.

வில்வமரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நம் உடலில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வ அர்ச்சனை மூலம் சிவனின் அருட்கடாச்சத்தைப் பெறமுடியும்.

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரக பயமில்லை.

வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கும்.

பலன்கள்: ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை தரிசித்த பலன்கள் கிடைக்கும்.