வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (07:40 IST)

வாழைத்தண்டு சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை குறையுமா?

வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரையும் என்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே வாழைத்தண்டு மூலம் சிறுநீரக கற்களை கரைத்து விடலாம் என்றும் கூறப்படுவதுண்டு. 
 
இந்த நிலையில் வாழைத்தண்டு தொடர்ச்சியாக சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும் என கூறப்படுகிறது. சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரை உயர்வையும் தடுக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு ஒன்று என்று கூறப்படுகிறது. 
 
வாழைத்தண்டை சட்னி செய்து இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட்டால் மிகவும் உடலுக்கு நல்லது என்றும் சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வாழைத்தண்டு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றும் குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது வாழைத்தண்டை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran