1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Tulsi kudineer is a cure for various diseases !!

பலவித நோய்களுக்கு அருமருந்தாகும் துளசி குடிநீர் !!

துளசி குடிநீர்
தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். 
 


துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி  சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.
 
துளசி குடிநீர் தயாரிப்பு:
 
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
 
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
 
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி  தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
ப்ரோக்கோலியில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன...?