1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Benefits of cooking and eating Drumstick spinach often !!

முருங்கை கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் !!

முருங்கை கீரை
முருங்கைக் கீரையில் விட்டமின் A,B,C ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது.

பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். சிலருக்கு குரல்  வளையில் வீக்கமும் வலியும் இருக்கும். அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும் வலியும் குணமாகும். 
 
வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது. உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க  உதவும்.
 
மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றில் வேண்டாத புழு, பூச்சிகள் இருந்தாலும் அதை மலத்துடன் வெளியேற்றும் சக்தி இந்தக் கீரைக்கு உண்டு. இரத்தத்தில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சத்து சேருவது ஆபத்தானது. 
 
இக்கீரை இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க வல்லது. இரத்த அழுத்த நோயால் வருந்துபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லை நீங்கும். இரத்தம்  தூய்மைப்படும். கண் தொடர்பான நோய்கள் போன்ற நோய்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.
 
குழந்தை பிறந்து பால் சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைக் கீரையை சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும். முருங்கைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம்.
அடுத்த கட்டுரையில்
தினமும் காலையில் முளைக்கட்டிய கொள்ளு எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!