திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (14:13 IST)

பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் துளசி !!

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. 

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும். 
 
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும். இதற்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. 
 
துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும். கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும். 
 
ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.