திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:32 IST)

குறைவான அடர்த்தி கொண்ட ரைஸ் பிரான் ஆயிலின் நன்மைகள் !!

நெல்லில் அரிசிக்கும் உமிக்கும் இடையில் உள்ள பழுப்பு நிற மாவு போன்ற பொருளில் இருந்துதான் ரைஸ் பிரான் ஆயில் தயாரிக்கப்படுகிறது.

ரைஸ் பிரான் ஆயில் குறைவான அடர்த்திக் கொண்டது. இதனால் இது எளிதில் சூடாகிவிடும் அதனால் 20% வரை எரிபொருள் சேமிப்பு கிடைக்கும். இந்த எண்ணையில் கொலஸ்ட்ரோல் இருக்காது. கொழுப்புத் தன்மை இருக்காது. எப்போதும் சுத்தமாகவே இருக்கும். 
 
ரைஸ்பிரான் ஆயிலில் உள்ள ‘லைபோயிட் ஆசிட்’ என்ற வேதிப்பொருள் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த எண்ணெயாக திகழ்கிறது.
 
ரைஸ்பிரான் ஆயிலில் ‘ஸ்குவாலின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தோலுக்கு பளப்பளப்பையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது. மேலும்  இது  தோலில் சுருக்கம் விழுவதையும் தவிர்கிறது. 
 
தலையில் பொடுகு வராமலும், தோலில் அரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் ரைஸ் பிரான் ஆயில் அழகுசாதன பொருள்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.  பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளில் உதவி ஆற்றலையும் புத்துணர்வையும் அளிக்கிறது.
 
இந்த எண்ணெய்க்கு என்று தனி மணமோ, சுவையோ கிடையாது. நாம் சமைக்கும் உணவின் மணத்தையும், சுவையையும் அப்படியே கொடுக்கும்.