1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (13:57 IST)

பலவித நோய்களுக்கு நிவாரணம் தரும் துளசி !!

Tulsi
துளசியை பச்சையாக சாப்பிடுவது இருமல், சளிக்கு மிகவும் நல்லது. துளசி உடலிற்கு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. துளசி இலையைப் ஊற வைத்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.


உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து குளித்தால் நாற்றம், வாடை போன்றவை வராது.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் தோல் நோய்கள் அண்டாது. பேன், பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

துளசி ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உடலின் செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து நரம்புகளை வலுவாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். துளசி இலைகளை தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்கும்.

துளசி இலைச் சாற்றில் தேன், இஞ்சி கலந்து ஒரு தேக்கரண்டி குடித்து வரலாம். சளி, மற்றும் இருமல் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை துளசிக் கஷாயம் கொடுத்தால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.