திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (12:47 IST)

பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாகும் ஜாதிக்காய் !!

Jathikai
ஜாதிக்காயில் ஆண் மற்றும் பெண்மரம் என இரண்டு வகைகள் உண்டு. ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் பயன்படுகிறது.


ஜாதிக்காய் எண்ணெய்யில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது.

ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும்.

ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், சீரான தூக்கத்தையும் தரும்.

ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு சரியாகும். விந்து கெட்டிப்படும், உடல் குளிர்ச்சியடையும், இரைப்பை, ஈரல் பலப்படும். செரிமானத்திறன் மிகுந்து உடல் மிகுந்த சுறுசுறுப்படையும்.