வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சளியினால் ஏற்படும் தொல்லையை கட்டுக்குள் வைக்கும் கற்பூரவள்ளி...!

கற்பூரவல்லி இலைகள் கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி,  ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
கற்பூரவல்லி இலைகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; வியர்வையை அதிகமாக்கும்;  கோழையகற்றும்.
 
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
 
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி  சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
 
கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர்  விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும்.  மூச்சுக்குழல் அடைப்பு சீராகும். 
 
கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக்  கட்டு தொண்டைக் கம்மல் குணமாகும்.
 
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
 
சிலருக்கு வறட்டு இருமல் இருமும் போது நெஞ்சுப்பகுதி அதிகமாக வலியெடுக்கும். இதனைத் தடுக்கவும் ஓமவல்லி பயன்படுகிறது. ஒரு கொத்து ஓமவல்லி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்  வறட்டு இருமல் கட்டுப்படுத்தப்படும்.