செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அசைவ உணவுகளை சாப்பிடுவது தீமைகளை ஏற்படுத்துமா...?

சைவ உணவுகளே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உடலுக்கு தேவையான புரோட்டீனை சைவ உணவுகள் மற்றும் காய்கறிகள் அளிக்கின்றன.
சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
தீமைகள்:
 
மாமிச உணவால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது. கலோரிச்சத்து  அதிகம் உள்ளது. கொழுப்பும், புரதமும் மிகுந்து காணப்படுகிறது. என்றாலும், சில தீய விளைவுகளும் அதனால் ஏற்படுகின்றன.
 
அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும்.
 
மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் உள்ள க்ளைகோ  புரதத்தைப் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.
 
சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர்களுக்கு மாமிச உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.
 
அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை என்றாலும் சைவ உணவுகளை சாப்பிடுவோர், தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ஈடுகட்ட வேண்டும்.