வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பல் கூச்சத்தை போக்கும் இயற்கை மருந்து புதினா....!

நமது பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பரம்பரை போன்ற காரணங்களினால் பல் பிரச்சனை பெரிய அளவில் தொல்லை தருவதாக உள்ளது. முக்கியமாக குளிர்ந்த ஐஸ்கிரீமோ, சூடான பானமே குடிக்கும்போது உங்களுக்கு சுரீர் என வலி ஏற்படுகிறதா? நீங்கள் பற்கூச்சத்தால் அவதிப்படுகிறீர்கள் என்று எடுத்துக்  கொள்ளலாம்.
பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு  ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது.
 
உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். பேக்டீரியாக்களை உப்பு அழிக்கும். ஈறுகளை பலப்படுத்தும்.ர த்தக் கசிவிற்கு உப்பு நீரில் கொப்பளித்தால் நல்ல பலங்களைத் தரும்.
கிராம்பு சிறந்த வலி நிவாரணி. வலியை மரத்துப் போகச் செய்யும். பேக்டீரியாக்களை அழிக்கிறது. அதன் காரத்தன்மைக்கு பேக்டீரியாக்கள் பற்களை நெருங்காது.
 
அதிக நேரம் பல் தேய்த்தலையும், படுக்கைவசமாக தேய்த்தலையும், கடின கூச்சங்கள் கொண்ட பிரஷ்ஷினால் தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும். தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கமுள்ளவர்கள், அதைத் தடுக்க ஸ்பிளிண்ட் அல்லது நைட்கார்டு பயன்படுத்தலாம்.

உடல் பருமனால் சிரமப்படுபவர்களுக்கு உதவும் தேன்...!

புதினா இலையை எடுத்து அதை நிழலில் நன்றாக காய வைத்து, தூள் உப்புடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்கினால் இரண்டே நாட்களில் பல் கூச்சம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
 
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.