புதன், 10 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல் பருமனால் சிரமப்படுபவர்களுக்கு உதவும் தேன்...!

உடல் பருமனால் சிரமப்படுபவர்களுக்கு உதவும் தேன்...!
இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும்  காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் உள்ள  கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் அளவைக் குறைக்கும்.
 
வயிறு மற்று குடற்புண் ஆற தினமும் இரண்டு தேக்கரண்டி தேனை உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடித்து வந்தால் வயிறு மற்றும்  குடற்புண்கள் ஆறிவிடும்.
வறட்டு இருமள் குணமாக தேனுடன் நெல்லிக்காய்க்களைத் துண்டு துண்டாக்கி அதனுடன் சிறிதளவு ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
உடல் பருமனால் சிரமப்படுபவர்களுக்கு உதவும் தேன்...!
மூட்டுத் தேய்மானம், வலி நீங்க மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து. தேனை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுதும் உணவு உட்கொண்டாலும் ஒரு தேக்கரண்டி தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். இதனால் மூட்டுகள் தேயாது, மூட்டுக்கள்  வலிக்காது.