புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (20:31 IST)

உலகில் மிக நீளமான சாண்ட்விச் தயாரித்து சாதனை !

மெக்சிகோ நாட்டில் வருடம் தோறும் பாரம்பரிய சாண்ட்விச் திருவிழா நடப்பது வழக்கம்.இது அந்நாட்டு வழக்கப்படி தோர்டா திருவிழா என்று அழைக்கப்படும். இந்த விழாவில் நாடு முழுவது உள்ள எண்ணற்ற சமையல் கலைஞர்கள் கூடி இந்த சாண்ட்விச் திருவிழாவில் பங்கெடுப்பர்.
இந்நிலையில் இம்முறை இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து சமையல் கலைஞர்களும் ஒன்றுகூடி,  வெறும் 3 நிமிடங்களில் 236 அடி சாண்ட்விச்சை ஒன்றை தயாரித்தனர். இதில் ஆயிரம் பிரட், துண்டுகள், மயோனிஸ் ,தக்காளி, வெங்காயம், கோஸ், இறைச்சி, ஆகியவற்றைவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
சமையல் கலைஞர்கள் இந்த சாண்ட் விச்சை தயாரித்த பின்னர், பார்வையாளர்களுக்கு இதைச் சாப்பிட கொடுத்தனர். ஏற்கனவே124 அடிஅ செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய சாண்ட் விச் சாதனையை இது முறியடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.