1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (16:11 IST)

பேன் தொல்லையை முற்றிலும் நீக்க உதவும் குறிப்புகள் !!

நம் குளிக்கும் தண்ணீரில் முதல் நாள் இரவே வேப்பிலையை போட்டு வைத்து மறுநாள் அந்த தண்ணீரில் குளித்து வந்தால் பேன் குறைந்து விடும்.

வேப்பிலையை பேஸ்ட் போல அரைத்து குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தலையில் தேய்த்து ஊறவைத்து பின் குளித்தல் நல்ல பலன் கிடைக்கும்.
இரவு தூங்கும் போது வேப்பிலை, துளசி இரண்டையும் தலைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்கினால் பேன் குறைந்து விடும்.
 
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறு நாள் அந்த வெந்தயத்துடன் தேங்காய் பால் சேர்த்து நைசாக அரைத்து பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து பின் குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை விரைவில் குறைய தொடங்கும்.
 
குப்பை மேனி கீரை சாறு எடுத்து அதை குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளித்து வர வேண்டும்.
 
10 பூண்டுகளை தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள், இத்துடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுழுவதும் தேய்த்து அரைமணிநேரத்தில் கழித்து குளிக்கவும்.