உடல் ஆரோக்கியத்தை காக்கும் வாழைத்தண்டு சாறு !!
வாழைத்தண்டு சாறைப் பருகுவதால் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரகக் குழாயில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
ரத்த சோகையை போக்குகிறது. வாழைத்தண்டில் இரும்பு மற்றும் வைட்டமின் பி 6 சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரும்பு மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள், நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் ரத்த சோகையை நம்மை விட்டு போக்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாழைத்தண்டில் பொட்டாசியம் சத்தானது நிறைந்துள்ளது. எனவே, வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த நோயும் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.
சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கிறது. நம் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதற்கான காரணம் கால்சியம் படிவங்கள் தான். நாம் வாழைத்தண்டு சாறைக் குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
நச்சுக்களைப் போக்க உதவுகிறது. வாழைத்தண்டில் டையூரிட்டிக் எனப்படும் சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் பண்புகள் நிறைந்துள்ளன.
மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைத்தண்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் வாழைத்தண்டை சமைத்தோ அல்லது ஜூஸ் ஆகவோ குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.